சாணவாக்கியன் பக்கம்

எண்ணங்கள், விமர்சனங்கள், பரிமாற்றங்கள்…

சுஜாதாவின் மறைவு…

பதிந்தவர் சாணவாக்கியன் மேல் ஜூலை 19, 2008

நடு நிசி ஒரு மணியளவில்,தூக்கம் வரவில்லையென்ற வழக்கமான சமாளிப்புடன், எழுத்தாளர் ஜெயமோகன் வலைத்தளத்துக்குப் போன பொழுது, `சுஜாதா: மறைந்த முன்னோடி‘ என்ற வரிகள் கணிணியின் முகத்திலிருந்து எதிர்கொண்டன. ஒன்றும் புரியவில்லை. கையில், எப்பொழுதும் போல மேயத்தொடங்கியிருந்த சுஜாதாவின் `கற்றதும் பெற்றதும் – மூன்றாம் பாகம்’! எப்படி சாத்தியம்?

நினைவு தெரிந்த நாளாக, வளரும் விடலையின், பின்பு இளமையின், பின்பு இணக்கமான வாசிப்பின் துணையாக, மறக்க முடியாத ஒரு பகுதியாக இருந்த ஒரு ஆளுமையை, அவர் எழுத்துக்கள் தந்த சினேகிதத்தை, இதத்தை, மகிழ்ச்சியை, ஒரு நடுநிசியின் இரக்கமற்ற தகவல் பிரிப்பது என்ன நியாயம்? சுஜாதா பாணியில் சொன்னால், அவர் இப்படி `சரேலென்று ஸ்பாட்டை விட்டு மறைவார்’ என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இன்னும் இருக்கிறது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>